News August 15, 2024

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கலந்தாய்வு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று (ஆக.14) மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 13, 2025

குமரி: ரேஷன் கார்டு பிரச்னைகளை தீர்க்க இன்று முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட செயல்பாட்டை களைவதற்காக சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று (செப்.13)  காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை  நடக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புகைப்படம் மாற்றம் உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார். 

News September 13, 2025

குமரி: வலையில் சிக்கிய மருத்துவகுண மீன்கள்

image

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கு மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலில் மீன்பிடித்த மீனவர்களின் வலையில் அதிக அளவில் அயலை மீன்கள் சிக்கின. வழக்கமாக 2500 முதல் 3000 வரை விலை போகும் ஒரு பெட்டி மீன்கள் நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை ஆனதால் மீனவர்கள் வருத்தம் அடைந்தனர்.

News September 13, 2025

குமரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

image

குமரி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!