News January 22, 2025
அனைத்து துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார். ஜனவரி 27,28 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்று பல்வேறு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கவுள்ளார். இதில், பயன்பெறும் பயனாளிகளுக்கான தேர்வு பட்டியலை தயார் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
Similar News
News September 18, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
அரசு பள்ளியில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

விழுப்புரம் அடுத்த கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் இன்று சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சமூக நீதி தொடர்பான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
News September 18, 2025
விழுப்புரம்: இனி ஆட்சியர் அனுமதி கட்டாயம்

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை பனை மரங்கள் பாதுகாக்கப்படுவதற்கு வழிவகை செய்கிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பனை மரங்களை வெட்டுதற்கு தேவை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும். இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற எடுக்கப்பட்டுள்ளது.