News June 21, 2024

அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. அதில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய் சேய் நலப்பணி தடுப்பூசி மற்றும் குடும்ப நல பணிகளை நடை பெற உரிய உத்தரவு வழங்க வேண்டும்.

Similar News

News September 8, 2025

மக்கள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (08.09.2025) பெற்றுகொண்டார். உடன் மாவட்ட வன அலுவலர் இராஜங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 8, 2025

முதல்வர் கோப்பை போட்டிகள் துவக்கம்

image

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை அன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி. வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

News September 8, 2025

தர்மபுரி: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் <>இங்கே <<>>கிளிக் செய்து 21.09.2025 தேதிக்குள் Register பண்ணுங்க! இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!