News January 17, 2026
அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு..

TN-ல் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் ரேஷன் பொருள்களை பெற்று வருகின்றனர். இந்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி, பொங்கல் விடுமுறையால், மாத ரேஷன் பொருள்கள் வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. குடியரசு தினத்தை ஒட்டியும் 2 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, பிப்ரவரியில், ஜனவரி மாத பொருளையும் சேர்த்து வழங்க மக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அரசு இதை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News February 7, 2026
சிலிகான் மூடிகள் பாதுகாப்பானதா?

சிலிகான் மூடிகள் பயன்படுத்த மற்றும் சுத்தம் செய்ய மிகவும் எளிதாக உள்ளதால், நவீன சமையலறைகளில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. இந்நிலையில் அவை பாதுகாப்பானதா என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது. சான்றளிக்கப்பட்ட உணவு தர சிலிகானிலிருந்து தயாரிக்கப்பட்ட மூடிகள் பாதுகாப்பானவை. இருப்பினும், அவை சாதாரண சமையலறை வெப்பநிலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அவை பிளாஸ்டிக் போன்று ஆபத்தை ஏற்படுத்தலாம்.
News February 7, 2026
விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வெற்றி: PM

உலகக்கோப்பையை வென்றுள்ள U 19 அணி குறித்து பெருமை கொள்வதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ள அவர், இந்த வெற்றி பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் CM ஸ்டாலின், EPS உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
News February 7, 2026
காங்கிரஸ் இருந்தால் அது மதச்சார்பற்ற கூட்டணி: கார்த்தி

தமிழகத்தில் 1967-க்கு பிறகு தனித்து நின்று வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரவீன் சக்கரவர்த்தி கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், காங்கிரஸ் இருந்தால்தான் அது மதச்சார்பற்ற கூட்டணி; காங்கிரஸ் கட்சியை வெறும் கூட்டலாக மட்டும் பார்க்காமல், பெருக்கலாக பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


