News December 28, 2025

அனைத்து கட்டடங்களுக்கும் ₹1,000.. TN அரசு நிர்ணயித்தது

image

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு ₹500, பிற பயன்பாட்டு கட்டடங்களுக்கு ₹1,000 ஆகும். மேலும், சொத்துவரி பெயர் மாற்றத்தின்போதே குடிநீர் கட்டணம், புதை சாக்கடை இணைப்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு அதே விண்ணப்ப அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News February 9, 2026

புதுக்கோட்டை: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

கூட்டணியில் சேர தூது.. சசிகலா வைத்த டிமாண்ட்!

image

NDA-வில் சேர சசிகலா விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், EPS தனக்கு நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, தன்னுடன் இருக்கும் பள்ளிப்பட்டு நரசிம்மன், Ex அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என சசிகலா கேட்டாராம். இதனை கேட்ட EPS, முதலில் ஆதரவு கடிதம் கொடுத்தால் சீட்டு பற்றி பேசலாம் என கூறிவிட்டாராம்.

News February 9, 2026

FLASH: உப்பு விலை தலைகீழாக குறைந்தது

image

வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் முன்கூட்டியே உப்பு உற்பத்தி செய்யும் பணி தூத்துக்குடி உப்பளங்களில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பழைய உப்பு 1 டன் ₹3,000 வரை விற்பனையான நிலையில், தற்போது ₹1,200-க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய உப்பும் 1 டன் ₹1,300-க்கே விற்கப்படுகிறதாம். தற்போது 1 கிலோ உப்பு ₹20 வரை விற்கப்படும் நிலையில் விலை குறைய வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் விலை என்ன?

error: Content is protected !!