News December 19, 2025

அனுமன் ஜெயந்தியில் சொல்ல வேண்டிய மந்திரம்!

image

‘அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டுஅயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்’.
<<18609129>>இன்று <<>>இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். இதனால், மனதில் பயம் நீங்கி, வாழ்வில் வெற்றி கூடும் என நம்பப்படுகிறது. SHARE IT.

Similar News

News December 21, 2025

விஜய் + அதிமுக + பாஜக.. முடிவை தெரிவித்தார்

image

ஆரம்பம் முதலே தவெகவை NDA கூட்டணிக்குள் கொண்டுவர EPS உள்ளிட்ட பல தலைவர்கள் காய் நகர்த்தினார்கள். இந்நிலையில், சமீபத்தில் தமாகாவுடன் கட்சியை இணைத்த தமிழருவி மணியன், வெளிப்படையாகவே விஜய்க்கு கூட்டணி அழைப்பை விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த விஜய் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என்ற அவர், விஜய் தனியாக நின்றால் பலனில்லை என்பதை ஒரு தந்தையாக கூறுகிறேன் எனவும் அறுவுறுத்தியுள்ளார்.

News December 21, 2025

முட்டைகள் பாதுகாப்பானவையே: FSSAI

image

முட்டைகளில் நைட்ரோஃபியூரான் இருப்பதாகவும், இதனால் புற்றுநோய் ஏற்படலாம் என்றும் தகவல் பரவியது. இந்நிலையில், இந்த தகவல் தவறானவை & அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை என FSSAI தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் முட்டைகள் மனிதர்கள் உண்பதற்கு முற்றிலும் பாதுகாப்பானது தான் என்றும் உறுதியளித்துள்ளது. நைட்ரோஃபியூரான் பயன்பாட்டுக்கான தடையை அனைத்து முட்டை நிறுவனங்களும் பின்பற்றுவதாகவும் கூறியுள்ளது.

News December 21, 2025

ஸ்டாலின் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்: தமிழிசை

image

பைபிள் வாசகங்களை பெருமையாக குறிப்பிடும் CM ஸ்டாலின் மதச்சார்பற்றவராக இருந்தால், பகவத் கீதை வாசகங்களை என்றாவது குறிப்பிட்டு உள்ளீர்களா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு இந்து பகையை விதைத்துக் கொண்டிருப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் விமர்சித்துள்ளார். மதச்சார்பின்மையை பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!