News March 15, 2026

அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

image

வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச் செல்ல வாக்காளர்களுக்கு அனுமதி கிடையாது என ECI அறிவித்துள்ளது. இதற்காக வாக்குச்சாவடிக்கு வெளியே செல்போன் டெபாசிட் மையம் அமைக்கப்படும். அங்கு செல்போனை ஒப்படைத்த பிறகே வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்களித்த பிறகு செல்போனை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

Similar News

News April 13, 2026

மூன்று கட்சிகளுக்கும் ஒரே வேட்பாளர்!

image

தேர்தல் என்றாலே சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமிருக்காது. அந்தவகையில் குஜராத் உள்ளாட்சி தேர்தலில் ஒரு வார்டுக்காக பாஜக, காங்.,, ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளின் சார்பிலும் பாரத் சிங் வகாலா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு வேட்பாளர் ஒரு கட்சியின் சார்பாகவோ அல்லது சுயேச்சையாகவோ தான் போட்டியிட முடியும் என்ற நிலையில், இதுகுறித்து EC இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

News April 13, 2026

I AM BACK.. கர்ஜனைக்கு தயாரான தோனி

image

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள KKR-க்கு எதிரான நாளைய போட்டியில் தோனி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக முதல் 4 போட்டிகளில் விளையாடாத அவர், தற்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இம்பேக்ட் பிளேயராக அவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பதால் பிளேயிங் 11-ஐ CSK மாற்றணுமா? யாரை உள்ளே கொண்டு வரலாம்?

News April 13, 2026

5 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை

image

பிஹாரில் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில், முகேஷ் என்ற கேண்டீன் காவலாளி, 5 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, அலறல் சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!