News February 25, 2025

அனுமதியின்றி மண் அள்ளிய 2 பேர் கைது

image

பெரியகோம்பை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து, ஆர்.ஐ., புஷ்பா தலைமையில் வருவாய்த்துறையினர், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மண் அள்ளி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அனுமதியின்றி மண் அள்ளி வந்தது தெரிந்தது. இதையடுத்து, டிப்பர் லாரி மற்றும் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கைது.

Similar News

News September 6, 2025

வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் மாயம் போலீசார் விசாரணை

image

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி பிரிவு) பிரபாகரன் நேற்று இரவு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு தனது காரில் நாமக்கல் நோக்கி சென்றவர் வீட்டிற்கு செல்லாத நிலையில் மாயமானார். இதனை அடுத்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் யசோதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 5, 2025

நாமக்கல்: பிரச்னையா..? CM Cell-ஐ அணுகவும்!

image

நாமக்கல் மக்களே..,அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக்<<>> செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். உடனே SHARE

News September 5, 2025

நாமக்கல்: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

image

நாமக்கல் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!