News January 20, 2026
அனுமதியின்றி போட்டோ எடுத்ததால் விநோத தண்டனை!

UAE-ல் பொது இடத்தில் மற்றொருவரை அனுமதியின்றி போட்டோ எடுத்து அதை Snapchat-ல் பதிவிட்டவருக்கு ₹6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டோ எடுத்தவருக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த வழக்கில், தனியுரிமை மீறியதை உறுதி செய்து அபராதத்துடன், போட்டோ எடுத்தவரின் Snapchat கணக்கை நீக்கவும், இண்டர்நெட்டை 6 மாதங்களுக்கு பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. பொது இடங்களில் போட்டோ எடுத்தால் இனி கொஞ்சம் உஷாரா இருங்க!
Similar News
News February 1, 2026
தேர்தலுக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது என்ன?

தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு & கேரளாவுக்கு 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள், அரிய வகை கனிம வழித்தடங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. WB, அசாமுக்கு புதிதாக 5 சுற்றுலாத் தலங்கள், 4,000 மின்சார பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் தேவைப்படும் 2&3-ம் நிலை நகரங்கள் மீது பட்ஜெட் கவனம் செலுத்துவதால், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களும் பயனடையும் என FM கூறியுள்ளார்.
News February 1, 2026
தவெக நிர்வாகிகள் இதை பண்ணுங்க: விஜய் அட்வைஸ்

தவெக தொடங்கப்பட்டு நாளையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், 3-ம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட நினைக்கும் விஜய், நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அனைத்து மாவட்டத்திலுள்ள மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நாளை காலை 11 மணிக்கு பனையூரில் நடக்கும் தொடக்க விழாவையொட்டி முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
News February 1, 2026
மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகம் எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


