News January 11, 2026
அனுமதியின்றி பெயரை யூஸ் பண்ணக்கூடாது: கமல் வழக்கு!

பெயர், இனிஷியல் (K.H), போட்டோஸ், குரல் & ‘உலகநாயகன்’ பட்டத்தை வணிக ரீதியில் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என கமல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையை சேர்ந்த ‘நீயே விடை’ நிறுவனம், T-ஷர்ட்டுகள் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். AI & Deep Fake மூலம் ஒருவரின் அடையாளத்தை தவறாக பயன்படுத்த முடியும் என்பதால், இந்தத் தடை அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 29, 2026
BREAKING: மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்.. அதிரடி திருப்பம்

அதிமுகவில் ஒன்று சேர நான் ரெடி என்று OPS வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால், TTV தினகரனும் அவரின் அருமை அண்ணன் EPS-ம் ரெடியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், OPS-ஐ அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என EPS கூறி வருகிறார். ஒருவேளை TTV தினகரன், EPS உடன் பேசி ஒப்புதல் வாங்கினால் அதிமுக கூட்டணியில் OPS இணையலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். EPS – OPS மீண்டும் இணைவது சாத்தியமா?
News January 29, 2026
போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் Ex CM-க்கு நோட்டீஸ்

தெலங்கானாவில் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போன்கள் ஒட்டுக்கேட்பு வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரித்து வருகிறது. இதில், ஏற்கெனவே Ex-CM சந்திரசேகர ராவின் மகன் KTR-டம் 8 மணிநேரம் SIT கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இந்நிலையில் சந்திரசேகர ராவிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிக்கு நிதி பெற்றது பற்றியும் நாளை அவரிடம் விசாரிக்கப்படவுள்ளது.
News January 29, 2026
இன்று மட்டும் ஒரு கிராம் தங்கம் ₹1,190 உயர்வு.. அதிர்ச்சி

தங்கம் விலை இன்று (ஜன.29) ஒரே நாளில் 1 கிராம் ₹1,190 உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது. இதனால் சவரனுக்கு ₹9,520 அதிகரித்துள்ளதால், ஏற்கெனவே ஆபரணங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு இன்று வாங்க திட்டமிட்டுள்ளோர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். காரணம், இன்றைய விலைக்கே ஆர்டர் செய்த நகையை வாங்க வேண்டும் என்பது தான். இந்த விலையேற்றம், வரும் நாள்களில் குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


