News July 9, 2024

அனுமதியற்ற விளம்பர பதாகைகள்- ஆட்சியர் எச்சரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பாதாகைகளின் நிறுவனா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா். விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கான அனுமதியைப் பெற 15 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி இல்லாத பதாகைகளின் நிறுவனா் மீது ஓராண்டு சிறை, ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

Similar News

News July 7, 2025

தி.மலையில் மின்வேலியால் தொழிலாளி பலி!

image

வந்தவாசியை அடுத்த அதியனூரை சேர்ந்த விவசாயி சாமிக்கண்ணு (48). இவரது விவசாய நிலத்தில் உள்ள நெற்பயிரை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் சட்டவிரோதமாக வயலில் மின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த குப்பன் (43) என்பவர் நேற்று காலை அந்த நிலத்தின் வழியாக சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News July 6, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு (ஜூலை 6) இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை இரவு ரோந்துக்கு தாலுக்கா வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உங்கள் தாலுக்கா அதிகாரி அழைக்கலாம் மற்றும் 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!