News December 12, 2025
அனுபவம் வாய்ந்த தலைவரை இழந்துவிட்டோம்: PM மோடி

Ex மத்திய உள்துறை அமைச்சர் <<18539967>>சிவராஜ் பாட்டீல்<<>> இன்று காலமானார். அவரது மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் X தளப்பதிவில், சிவராஜ் பாட்டீலின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அனுபவம் வாய்ந்த தலைவரான அவர், சமூக முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்டவர். பலமுறை அவருடன் உரையாடியுள்ளேன். அவரது குடும்பத்துக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி! என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 12, 2025
ஹாட்ரிக் விக்கெட் எடுத்து நிதிஷ் ரெட்டி அசத்தல்

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஆந்திராவின் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி பவுலிங்கில் கலக்கியுள்ளார். ம.பி.,க்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திரா அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய ம.பி., அணிக்கு, நிதிஷ் ரெட்டி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும் 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி ம.பி., அணி வெற்றிபெற்றது.
News December 12, 2025
23 நாள்கள் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான ரேஷன் கடை விடுமுறை நாள்களின் பட்டியலை அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஜன.1 (ஆங்கில புத்தாண்டு), ஜன.15, 16, 17 (பொங்கல் விடுமுறை), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 (தைப்பூசம்), மார்ச் 21 (ரம்ஜான்), ஏப்.14 (தமிழ் புத்தாண்டு), மே 1 (தொழிலாளர் தினம்), ஜூன் 26 (மொஹரம் பண்டிகை), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.14 (விநாயகர் சதுர்த்தி) உள்ளிட்ட 23 நாள்கள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
CM விமானப் பயணத்துக்கு மட்டும் ₹47 கோடி செலவு

கடந்த 2 ஆண்டுகளில் விமானப் பயணங்களுக்கு மட்டும், ₹47 கோடியை கர்நாடக CM சித்தராமையா செலவு செய்துள்ளது அரசு ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சோசலிச தலைவர் என சொல்லிக்கொண்டு அரசு பணத்தை சித்தராமையா விரையம் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளது. முன்னதாக மோடியின் விமான பயணங்களை காங்., கடுமையாக சாடி வந்த நிலையில், இப்போது சித்தராமையாவை BJP வறுத்தெடுத்து வருகிறது.


