News November 15, 2025
அனில் அம்பானி மீது பிடியை இறுக்கும் மத்திய அரசு

வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக <<17314173>>அனில் அம்பானி<<>>க்கு ED மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வீடியோ காலில் ஆஜராக விடுத்த கோரிக்கையும் மறுத்துள்ளது. முன்னதாக, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு (ADAG) எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, ADAG குழுமத்திற்கு சொந்தமான 4 நிறுவனங்கள் தற்போது கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது.
Similar News
News March 28, 2026
பொன்ராஜ் பேசியது தவறில்லை: சீமான்

தவெகவை ஆதரிக்கும் மகளிர் குறித்து ஆபாசமாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது<<19485483>>விஜய் <<>>நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பொன்ராஜ் பேசியது தவறில்லை என்றும், அது ஆதங்கத்தின் வெளிப்பாடு எனவும் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் பெண்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மறைக்க, விஜய் புகார் அளித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
News March 28, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 28, பங்குனி 14 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News March 28, 2026
தங்க வர்த்தக மையமாகும் சிங்கப்பூர்

ஆசியாவின் முதன்மையான தங்கம் வர்த்தக மையமாக மாற உள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் நாணய ஆணையம் மற்றும் சிங்கப்பூர் புல்லியன் சந்தை சங்கம் இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொள்கின்றன. இந்தத் திட்டம் சிங்கப்பூரின் நிதித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொருளாதாரத் பன்முகத்தன்மையையும், உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


