News October 31, 2025
அனிமேஷன் பிடிக்குமா.. இந்த படங்களை பாருங்க

அனிமேஷன் திரைப்படங்கள் கற்பனையின் எல்லைகளை மீறிய ஒரு வித்தியாசமான உலகம். அனிமேஷன் காட்சிகள் ஒரு கதையை மட்டும் சொல்லாமல், உணர்வுகளையும், கனவுகளையும் கொண்ட புது உலகத்தை உருவாக்கி காட்டுகின்றன. உலகளவில் பலரையும் ஈர்த்த சிறந்த 10 அனிமேஷன் படங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு பிடித்த அனிமேஷன் படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News November 1, 2025
வங்கிகளுக்கு புதிய டொமைன்… இன்றோடு கெடு முடிகிறது

சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில், வங்கிகள் தங்களின் இணையதள முகவரியை .bank.in என்ற டொமைனுக்கு மாற்றியுள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. SBI, PNB,கனரா ஆகிய பொதுத்துறை வங்கிகளும், HDFC, ICICI, AXIS, Kotak Mahindra உள்ளிட்ட தனியார் வங்கிகளும் புதிய டொமைனுக்கு மாறிவிட்டன. ஆனால், சில தனியார் வங்கிகள் மட்டும் இன்னும் .com என்ற முகவரியில் தொடர்கின்றன. உங்க பேங்க் எப்படி?
News November 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 506  ▶குறள்: அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. ▶பொருள்: நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள். 
News November 1, 2025
RSS-ஐ தடை செய்ய வேண்டும்: கார்கே

இந்தியாவில் ஏற்படும் பெரும்பாலான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பாஜக – RSS காரணமாகவே உருவாவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார். எனவே, RSS அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI), முஸ்லிம் லீக், Jamiat Ulema-e-Hind ஆகியவற்றின் மொழிகளையே கார்கே பேசுவதாகவும் சாடியுள்ளது.


