News December 14, 2025

அந்நிய செலாவணி கையிருப்பு 68,726 கோடி டாலராக உயர்வு

image

டிச.5-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு $68,726 ஆக உயர்ந்துள்ளதாக RBI தெரிவித்துள்ளது. இது, கடந்த நவ.28-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 187 கோடி டாலர்கள் குறைந்து $68,623 கோடியாக ஆக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ₹90.57-ஆக உள்ள நிலையில், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் RBI விளக்கம் அளித்துள்ளது.

Similar News

News December 14, 2025

தஞ்சாவூர்: ரூ.96,210 சம்பளம்.. TNSC வங்கியில் வேலை!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

இனி வந்தே பாரத் ரயில்களில் நம்ம ஊர் உணவு

image

வந்தே பாரத் ரயில்களில் டீ & உணவு வழங்கப்படுகிறது. இவை ஒரு குறிப்பிட்ட மெனு பட்டியலின்படி இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்தந்த வட்டார உணவுகளை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உதாரணமாக, தென்பகுதிகளை நோக்கி செல்லும் ரயில்களில், முக்கிய தென்னிந்திய உணவுகள் வழங்கப்படுமாம். இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. நம்ம ஊர் ஸ்பெஷலாக எந்த உணவு வழங்கலாம்?

News December 14, 2025

பொங்கல் பரிசுத் தொகை.. அமைச்சர் HAPPY NEWS

image

2026 தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கப் பரிசை திமுக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பரிசில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹1,000 வழங்கப்படுமா என அமைச்சர் பெரிய கருப்பனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ₹1,000 வழங்கும் அதிகாரம் என்னிடம் இல்லை என்ற அவர், CM உத்தரவின் பேரிலேயே செயல்படுவோம் என்றார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

error: Content is protected !!