News November 6, 2025
அந்த மேஜிக் மீண்டும் நடக்குமா?

ரஜினி என்றாலே ஜாலியான, குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் மாஸ் கமர்சியல் ஹீரோ. ஆனால், அப்படியான ரஜினியை ‘பேட்ட’ படத்திற்கு பிறகு பெரிதாக பார்க்க முடியவில்லை. எல்லாமே ரொம்ப சீரியஸான ரத்தம் தெறிக்கும் அதிரடி படங்களாகவே சமீபத்தில் வெளிவந்துள்ளன. ஆனால், நாம் ரசித்து கொண்டாடி தீர்த்த ரஜினியை மீண்டும் சுந்தர்.சி திரையில் கொண்டுவருவாரா என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் உள்ளனர். சாதிப்பாரா சுந்தர்.சி?
Similar News
News November 6, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 உயர்ந்து ₹164-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 உயர்ந்து ₹1,64,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, வரும் நாள்களில் விலையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
News November 6, 2025
கூட்டநெரிசல் மரணங்களால் தான் RCB விற்கப்படுகிறதா?

18 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின், கோப்பையை வென்ற RCB விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம், வெற்றி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த கூட்டநெரிசல் மரணங்கள் தான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே, RCB அணியின் உரிமம் கைமாற்றிவிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பிர்சனை இருப்பினும், RCB அணியை வாங்க பலமுனை போட்டி நிலவுகிறதாம்.
News November 6, 2025
Snapchat-ல் இனி Perplexity AI

நமது Whatsapp-ல் எப்படி மெட்டா AI இணைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல இனி Snapchat-ல் Perplexity AI இணைக்கப்பட உள்ளது. ஜனவரி, 2026-ல் இருந்து Snapchat பயனர்கள் இந்த வசதியை பெறலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இரு நிறுவனங்கள் இடையே சுமார் ₹3,300 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக ஸ்னாப் நிறுவனத்தின் பங்குகள் விலை 16% வரை உயர்ந்துள்ளது.


