News December 25, 2025

அந்தியோதயா ரயில் வேகம் அதிகரிப்பு

image

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு அந்தியோதயா ரயில் சென்று வருகிறது. இந்த ரயில் வருகிற ஜன.1 முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகிறது. அதன்படி இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 5.50 மணிக்கு பதிலாக 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 27, 2025

பொது விநியோகத் திட்ட குழுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

அரசின் பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழுவின் பதவிக்காலம் கடந்த அக்., மாதம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய குழுவில் சேர்வதற்கு பெண்கள், நுகர்வோர், பெருமைமிக்க நபர்கள் (ம) ஆதரவற்றோர் விண்ணப்பிக்கலாம். இதில் 5 பேர் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளோர் டிச.31ஆம் தேதிக்குள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 27, 2025

குமரி: கடல் அலையில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் பலி!

image

குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ரெஜின் ஜாஸ்பின் (34). உறவினர்களுடன் நேற்று முன் தினம் குளச்சல் வந்தார். குளச்சலில் இருந்து 9 பேர் சேர்ந்து படகில் பயணம் செய்தனர். மிடாலம் பகுதியில் படகு கரை இறங்கும் போது பெரிய அலை படகில் மோதியது. இதில் படகில் இருந்த ரெஜின் தூக்கி வீசப்பட்டு கடலில் விழுந்தார். மருத்துவமனை கொண்டு சென்ற பொழுது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். குளச்சல் போலீசார் விசாரணை.

News December 27, 2025

அன்னபூரணி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் அன்னபூரணி அம்மன் சன்னிதானத்தில் மார்கழி மாத வெள்ளிக்கிழமை வளர்பிறையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீஅன்னபூரணி அம்மனை வழிபட்டனர்.

error: Content is protected !!