News July 10, 2025
அந்தியூர் வீரபத்திரசுவாமி திருக்கோயில்

ஈரோடு, அந்தியூரில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல், விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், ஆகிய பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று, வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் நீங்குமாம். இதை Share பண்ணுங்க.
Similar News
News July 11, 2025
சித்தோட்டில் குட்கா விற்றவர் கைது!

ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கங்காபுரம் பகுதியில், வெங்கடேசன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 360 கிராம் எடையுள்ள ஹான்ஸ் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர் மீதும் வழக்குப்பதியப்பட்டது.
News July 10, 2025
பெருந்துறையில் முதியவர் தற்கொலை

பெருந்துறை, மேக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (77). இவர் கடந்த 8 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி, கடந்த ஒரு வாரமாக நோய் பாதிப்பு அதிகமாக இருந்ததால், மனமுடைந்து, வீட்டில் பூச்செடிகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
News July 10, 2025
ஈரோடு மாவட்டம் : மஞ்சள் விலை நிலவரம்

ஈரோட்டில் இன்று 10 மஞ்சள் விலை நிலவரம் பெருந்துறையில் விராலி
ரூ.8,878 – 13,539 வரையும், கிழங்கு ரூ.8,556 – 12,365 வரையும், ஈரோடு விராலி ரூ.9,299 – 13,859 வரையும், கிழங்கு ரூ.7655 – 12,589 வரையும்,
ஈரோடு சொசைட்டி விராலி ரூ.9,599 – 13,604 வரையும்,
கிழங்கு ரூ.8,255 – 12,312 வரையும்,
விராலி ரூ.10,602 – 12,906 வரையும்,
கிழங்கு ரூ.10,502 – 12,042 வரையும் மஞ்சள் விற்பனையானது.