News March 20, 2024
அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தினி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் கடந்த 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியான மகிஷாசுரமர்த்தினி என்கிற எருமை கிடாவை பலி கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக செம்பூர் அம்மன் குதிரை வாகனத்தில் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவற்றை தொடர்ந்து பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News April 4, 2025
போக்குவரத்து விதிமீறல் 1,835 வழக்குகள் பதிவு

ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், கடந்த மார்ச் மாதம், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது. மதுபோதையில் வாகனம் இயக்கிய, 13 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 141 வழக்கு, 932 ஹெல்மட் அணியாதது,29பேர் சீட் பெல்ட் அணியாதது,100 வாகனங்கள் காப்பீடு இல்லாதது என 1,835 வழக்குகள் என ரூ.6.77 லட்சத்திற்கு அபராதம் வசூலித்தனர். மதுபோதையில் வாகனம் ஒட்டிய 29 பேர் உரிமத்தை ரத்து செய்தனர்.
News April 4, 2025
ஈரோட்டில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்த 21 வயது முதல் 26 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<
News April 4, 2025
ஈரோட்டிற்கு மீண்டும் மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று(ஏப்.4) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.