News July 25, 2024
அந்தரத்தில் நின்ற ரோப்கார் ! கதறியழும் மூன்று பெண்கள்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, புகழ்பெற்ற அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ.9.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ரோப்கார் சேவையை நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிலையில், இன்று பலத்த காற்று வீசியதன் காரணமாக ரோப்கார் திடீர் பழுதாகி பாதியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடம்புரண்ட நான்கு பெட்டிகளையும் சரிசெய்யும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
Similar News
News August 14, 2025
தொழில் பயிற்சி நிலையத்தில் கால அவகாசம் நீட்டிப்பு

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 23.06.2025 முதல் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பெறப்பட்டு வருகிறது. தற்பொழுது கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711, 9499055712) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
News August 13, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர் மாவட்டத்தில் நாளை (14.08.25) திருமா நிலையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மருத்துவ காப்பீடு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய. ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற பல கோரிக்கைகளை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
கரூர்: 500 அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

கரூர் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.<