News August 17, 2024
அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடக்கம்

ரூ.1,919 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சற்றுமுன் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 3 மாவட்டங்களில் 74 ஏரிகள், 971 குளம் குட்டைகள் என 1,045 நீர்நிலைகளை நிரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; 24,468 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
Similar News
News September 15, 2025
கோவை: தபால் சேவை இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு!

கோவையில் விரைவு தபால் (எக்ஸ்பிரஸ் மெயில்) சேவை துவங்கி இன்று 38 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. கோடிக்கணக்கான கடிதங்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் சென்றடையச் செய்யும் வகையில் மத்திய அரசு 1986 ஆகஸ்ட் 1-ம் தேதி இச்சேவையை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் மும்பை, கோல்கட்டா உட்பட 14 நகரங்கள், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட ஏழு நாடுகளில் மட்டுமே இருந்த இது, தற்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது.
News September 15, 2025
கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 15, 2025
கோவை: ரயில்வே துறையில் வேலை!

கோவை மக்களே இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசைய ? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <