News January 9, 2026
அத்தாணி அருகே வாய்க்காலில் விழுந்து ஒருவர் பலி

அத்தாணியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(17) ஐடிஐ மாணவர் ஆவார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கவுண்டம்பாளையம் என்னும் இடத்தில் வளைவில் திரும்பும் பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலுக்குள் விழுந்தது. இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
ஈரோடு: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். (ஷேர் பண்ணுங்க)
News January 25, 2026
ஈரோடு: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

ஈரோடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ஈரோடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0424-2431020 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News January 25, 2026
பவானி அருகே விபத்து: தலை குப்புற கவிழ்ந்த கார்

பவானி அருகே அந்தியூர் – மேட்டூர் பிரதான சாலையில் பூனாட்சி பகுதியில் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


