News February 3, 2026

அதிருப்தியால் அண்ணாமலை விலகலா?

image

தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி, தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து <<19037307>>விலகுவதாக <<>>அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில், பொறுப்பாளர்கள் நியமனத்தில் நயினார் தன்னிச்சையாக செயல்பட்டதாலும், தனக்கு சம்பந்தமில்லாத தொகுதிகளை ஒதுக்கியதாலும், அதிருப்தியடைந்த அண்ணாமலை பதவியில் இருந்து விலகியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, இருவருக்கும் இடையே உரசல் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 5, 2026

தேர்தல் அறிக்கை.. மக்களிடம் ஐடியா கேட்கும் விஜய்!

image

தவெகவின் தேர்தல் அறிக்கைக்கு, பொதுமக்களும் தங்களின் பரிந்துரைகளை தெரிவிப்பதற்காக ’வெற்றித் தமிழ்நாடு’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இணையதளம் வெளியாகியுள்ளது. TN-ன் வருங்காலம் நீங்கள் இல்லாமல் இல்லை. விஜய்யின் ஆட்சி உங்களுக்கானது மட்டுமல்ல. உங்களுடைய பரிந்துரைகளாலும் ஆனது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் பரிந்துரைகளை தெரிவிக்க இந்த லிங்கை <>tvkmanifesto2026.com<<>> கிளிக் பண்ணுங்க!

News February 5, 2026

இந்தியா சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறிவிட்டது: PM மோடி

image

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற மந்திர வழிகாட்டுதலுடன் இந்தியா சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறிவிட்டது என PM மோடி பேசியுள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், விக்சித் பாரதத்தின் பயணத்தில், நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்வதாக கூறினார். மேலும், கடந்த சில நாள்களில் ஐரோப்பிய ஒப்பந்தம் உட்பட உலகின் 9 பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

News February 5, 2026

பெற்றோர்களே இதை கவனியுங்க!

image

குழந்தைகளிடையே அதிகரித்துவரும் சமூக ஊடக பயன்பாடு, அவர்களை வெகுவாக பாதிக்கும் என்று ஸ்வீடனின் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் நீண்ட நேரம் ஒரு விஷயத்தில் குழந்தைகளால் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்றும், ADHD போன்ற அறிகுறிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.

error: Content is protected !!