News January 2, 2026
அதிரடியாக விலை உயரும் பிரிட்ஜ், AC!

புதிய BEE (Bureau of Energy Efficiency) விதிகள் நேற்று (ஜன.1) முதல் அமலுக்கு வந்துள்ளதால் AC, Fridge-களின் விலை 5%–10% வரை உயருகின்றன. புதிய விதிகளால் ஸ்டார் ரேட்டிங் தரம் குறைகிறது. இதனால் புதிய ஸ்டார் ரேட்டிங்கை அடைய உற்பத்தி செலவு உயர்வது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவு போன்றவற்றால் விலை உயருகின்றன. 2025 செப்., GST குறைப்பால் விலை குறைந்த நிலையில், தற்போது உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலகம், திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவை பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.
News January 8, 2026
சென்சார் விசயத்தில் விஜய் பில்டப்: அப்பாவு

ஜனநாயகன் கடைசி படம் என்பதால் சென்சார் விசயத்தில் விஜய் பில்டப் செய்வதாக அப்பாவு விமர்சித்துள்ளார். 41 பேர் இறந்தபோது, ‘சென்னையில் தான் இருக்கிறேன், முடிந்தால் கைது செய்யுங்க’ என வீர வசனம் பேசினார், இப்போது அதனை சிபிஐ விசாரிக்கும் நிலையில் பேசுவாரா என கேள்வி எழுப்பினார். இந்த விசயத்தில் பாஜகவுடன் சேர்ந்து விஜய் நாடகமாடுவதாகவும், விரைவில் அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
தவெகவின் தேர்தல் ஆஃபர்: திருமாவளவன்

தேர்தலுக்காக தவெக எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு தருவதாக தவெக ஆஃபர் அளிப்பதாக கூறிய அவர், தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல, தேர்தலுக்கு ஆஃபர் கொடுக்கும் கட்சியாக தவெக உள்ளது என விமர்சித்துள்ளார். தனித்தே ஆட்சியை பிடிக்க முடியும் என நம்பும் அவர், தேர்தலுக்கு ஆஃபர் போட்டு காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


