News March 24, 2024

அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதி 

image

ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகில் அதிமுக தேர்தல் பணிமனை அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக இருப்பதால் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Similar News

News January 30, 2026

ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 30, 2026

ஈரோடு: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (இதை அதிகம் ஷேர் பண்ணுங்க)

News January 30, 2026

சென்னிமலை அருகே கொடூரக் கொலை சம்பவம்!

image

சென்னிமலை யூனியன் ஈங்கூர் செங்குளம் அம்மன் நகரைச் சேர்ந்த மதன்குமார்(26), மதுபோதையில் தம்பி சக்திவேலுடன்(25) தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த சக்திவேல், அண்ணனை அடித்து கீழே தள்ளி, ஹாலோ பிளாக் கல்லால் தலையில் அடித்துக் கொலை செய்தார். விபத்து போல நாடகமாடிய சக்திவேலை, சென்னிமலை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!