News March 20, 2024

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, கரூர் தொகுதியின் வேட்பாளராக தங்கவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News November 2, 2025

குளித்தலை அருகே விபத்து!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (60). இவர் தனது ஸ்கூட்டியில் கோட்டைமேடு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் செல்வகுமார் ஒட்டி வந்த லாரி மோதியதில் சம்பத் வலது கையில் காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரின் மகள் நித்திய லட்சுமி புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2025

வாங்கல் அருகே வசமாக சிக்கிய பெண்!

image

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே கோயம்பள்ளி பகுதியில், ட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக, வாங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நேரில் சென்ற வாங்கல் போலீசார் அங்கு மதுவிற்பனையில் ஈடுபட்ட சுதா என்ற பெண்ணை கைது செய்து, அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 2, 2025

கரூர் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!