News March 24, 2024

அதிமுக வேட்பாளர் நாளை வேட்புமனு தாக்கல்

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். டி பிளாக் ஆர்.ஆர்.டவர் முன்பு இருந்து காலை ஊர்வலமாக சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தேர்தல் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 7, 2026

இராம்நாடு: அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால்..!

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், இராம்நாடு மாவட்ட மக்கள் 04567-230036 or 94450-48893 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

இராம்நாடு: நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. இராம்நாடு மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <>கிளிக்<<>> செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT

News February 7, 2026

இராம்நாடு: கெட்டுப்போன 55 கிலோ மீன்கள் அழிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன் மார்க்கெட் மற்றும் தனியார் மீன் பதப்படுத்தும் கம்பெனிகளில் நேற்று (பிப்.06) திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர் விற்பனைக்காக மீன் மார்க்கெட் மற்றும் கம்பெனிகளில் வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர்.

error: Content is protected !!