News March 20, 2024

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, நாகை தொகுதியின் வேட்பாளராக சுர்ஜித் சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News January 28, 2026

வரலாற்று சின்னமான சூடாமணி விகாரம்

image

சூடாமணி விகாரம் என்பது நாகப்பட்டினத்தில் அமைந்திருந்த ஒரு பௌத்த விகாரமாகும். இது சோழர் காலத்தில் சுமார் கிபி 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. மேலும் இது சைலேந்திர வம்சத்தின் ஸ்ரீவிஜய மன்னன் ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மனால் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது. இது சோழர் காலத்தின் ஒரு முக்கிய நினைவுச் சின்னமாகவும் மக்களின் வாழ்வியலையும் எடுத்துரைக்கின்றது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 28, 2026

நாகை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாகை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

நாகையில் குறைதீர் கூட்டம்!

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே.எஸ். பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், இன்று ஜன.28ம் தேதி வாராந்திர பொது மக்கள் குறைத்தீர் கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.கே. பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 8 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!