News January 12, 2026
அதிமுக வாக்குகள் விஜய்க்கு செல்லாது: கவுதமி

அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு செல்ல வாய்ப்பு இல்லை என நடிகை கவுதமி கணித்துள்ளார். அதிமுக சார்பில் ராஜபாளையத்தில் போட்டியிட அவர் இன்று விருப்பமனு அளித்தார். அப்போது பேசிய அவர், பொதுவாழ்க்கையில் நமக்கு வரும் சவால்களை எப்படி சந்திக்கிறோம் என்பதை பொறுத்து தான் தலைமைத்துவம் கணிக்கப்படும் எனவும், விஜய்யின் இந்த அரசியல் பயணத்தை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News February 10, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 10, தை 27 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News February 10, 2026
திமுக கூட்டணிக்குள் அடிக்கும் ‘புயல் காற்று’

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்குள் மோதல் வெடித்துள்ளது. தொகுதி பங்கீடு இழுபறி, ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தால் காங்., – திமுக இடையே சலசலப்பு ஏற்பட்டது. இருதரப்பும் சற்று அமைதி காத்து வரும் நிலையில், தற்போது காங்., விசிகவுக்கும் வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இது வெளிப்படையாக நடந்திருப்பதால், அக்கட்சிகளின் நிர்வாகிகள் மத்தியில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
News February 10, 2026
ஜான் பாண்டியனால் கூட்டணி மாறும் கிருஷ்ணசாமி?

NDA-வில் இணைந்துள்ள ஜான் பாண்டியன், இந்த முறை தென்மாவட்டத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, ஓட்டப்பிடாரம் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்க பாஜக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதே தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ள கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் இணைவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், தவெக பக்கம் செல்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறாராம்.


