News March 22, 2026
அதிமுக பேச்சாளர்களுக்கு செலவுத் தொகை மறுப்பா?

தேர்தல் பிரசாரங்களின்போது ஒவ்வொரு கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களுக்கு கட்சித் தலைமை & வேட்பாளர்கள் குறிப்பிட்ட தொகையை பிரசார செலவாக கொடுப்பதுண்டு. இந்நிலையில், அதிமுக நட்சத்திர பேச்சாளர்களுக்கு கட்சித் தலைமை சார்பில் செலவுத்தொகை தரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். வேட்பாளர்களிடமே செலவினத்தை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனராம்.
Similar News
News April 13, 2026
தன் மீதும் தனது தங்கை தனி நபர் தாக்குதல்: CM ஸ்டாலின்

தன் மீதும் தனது தங்கை கனிமொழி மீதும் EPS தனி நபர் தாக்குதலை செய்வதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அவர், Ex முதல்வர் போல பேசவில்லை என்றும், சாமானிய மக்கள் கூட அவரது பேச்சால் முகம் சுளிப்பதாகவும் விமர்சித்துள்ளார். அவரது ஆட்சியின் சாதனைகளை சொல்ல முடியாத காரணத்தால் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் சாடியுள்ளார்.
News April 13, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 13, பங்குனி 30 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: ஏகாதசி
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News April 13, 2026
BJP வளர்ச்சிக்கு அண்ணாமலை தான் காரணம்: செல்லூர் ராஜு

தமிழ்நாட்டில் பாஜக இன்று பட்டிதொட்டியெங்கும் வளர்ந்துள்ளது என்றால் அதற்கு காரணம் அண்ணாமலையின் சிறப்பான பணிதான் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அவர் நாளை என்ன அறிக்கை கொடுப்பாரோ, என்ன பேட்டி கொடுக்கப்போகிறாரோ என மடியில் நெருப்பை கட்டி கொண்டு அமைச்சர்கள் இருந்தார்கள் எனவும் கூறியுள்ளார். மதுரை மேற்கில் தனக்காக அண்ணாமலை பிரசாரம் செய்ய வந்த போது இதனை அவர் கூறியுள்ளார்.


