News December 23, 2025

அதிமுக + பாமக கூட்டணி… முடிவை அறிவித்தார்

image

அதிமுக, பாஜக இடையே நடத்த பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயலிடம் EPS பட்டியல் ஒன்றை கொடுத்துள்ளார். இதில், முக்கிய விஷயமாக கூட்டணியில் பாமகவிற்கும் அவர் தொகுதி ஒதுக்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக(170), பாஜக(23), பாமக(23), மற்றவைக்கு(18) எத்தனை தொகுதிகள் என குறிப்பிட்டு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாம். PMK இன்னும் கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், EPS தொகுதிகளை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 24, 2025

VHT: ஒரே நாளில் 22 சதங்களை அடித்து மிரட்டல்

image

விஜய் ஹசாரேவின் தொடக்க நாளான இன்று பேட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருந்தனர். நட்சத்திர வீரர்களான <<18659415>>ரோஹித்<<>>, விராட் தொடங்கி, இளம் நட்சத்திரங்களான வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், படிக்கல் என 22 பேர் ஒரே நாளில் சதம் அடித்துள்ளனர். இதில் ஒடிசா வீரர் ஸ்வாஸ்டிக் சமல் இரட்டை சதம் அடித்து மிரள வைத்தார். VHT தொடர் முதல் நாளில் இருந்தே அனல் பறக்க தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

News December 24, 2025

தமிழக பிரபலம் காலமானார்.. உருக்கமான அஞ்சலி

image

<<18649552>>மூத்த தமிழறிஞர் அருகோ<<>>, புற்றுநோய் பாதிப்பால் காலமானார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சீமான் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், வாழ்நாள் முழுவதும் தமிழ் தேசிய அரசியல் போராளியாக திகழ்ந்தவர் அருகோ என்றும் அவரது மறைவு தமிழ் தேசிய அரசியலுக்கு பேரிழப்பு எனவும் சீமான் உருக்கமாக தெரிவித்துள்ளார். அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் அருகோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News December 24, 2025

இந்தியாவில் கால் பதிக்கும் 2 புதிய விமான நிறுவனங்கள்

image

சமீபத்தில் நாடு முழுவதும் <<18488484>>இண்டிகோ<<>> விமானங்கள் ரத்தானதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, இந்தியாவின் சிவில் விமான சேவையில் ஏர் இந்தியா, இண்டிகோ ஆகிய 2 நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, Al Hind Air, FlyExpress என 2 விமான நிறுவனங்கள் சேவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, Shankh Air நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி இருந்தது.

error: Content is protected !!