News March 28, 2024
அதிமுக நிர்வாகி மகனை கைது செய்யக்கோரி சாலை மறியல்

புதுக்கோட்டை, அறந்தாங்கியை அடுத்த திருவாப்பாடியில் உள்ள ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் சடலம் 27 ஆம் தேதி காலை கண்டெடுக்கப்பட்டது. விக்னேஷ் மரணத்திற்கு அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பெரியசாமியின் மகன் தமிழ்வேந்தன் , அவரது நண்பர் யோகேஸ்வரன் ஆகியோர்தான் காரணம் எனக் கூறிய அவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவப்பாடியில் விக்னேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Similar News
News April 6, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.50 லட்சம் வரை கடனுதவி

புதுகை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, நாட்டுக்கோழி பண்ணை, ஆட்டுப் பண்ணை, பன்றி வளர்ப்பு பண்ணை ஆகியவற்றை அமைக்க ரூ.10 முதல் ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் வைக்கோல், ஊறுகாய்ப்புல், தீவன சேமிப்பு வசதி பண்ணையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News April 5, 2025
புதுக்கோட்டை இரவு நேர ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (05.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News April 5, 2025
குறைகளை தீர்க்கும் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன்

புதுக்கோட்டை, விராலிமலை அருகில் இந்த மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மனை ஊரின் காவல் தெய்வம் என கூறுகின்றனர். துன்பம் கொடுப்பவர்களையும், சொத்துக்களை அபகரித்தவர்களையும் தண்டிக்கும் சக்தி கொண்டவள் இந்த அம்மன். இங்கு நீராடி ஈரத் துணியுடன் அம்மன் முன் நின்று தங்கள் குறைகளைச் சொல்லி மனதார வேண்டினால் அதற்கான தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதை பகிரவும்