News March 21, 2024
அதிமுக நகர் கழக செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

மானாமதுரையை சேர்ந்த துரைப்பாண்டியின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக அதிமுக நகர கழக செயலாளர் விஜிபோஸ் ரூ.8 லட்ச பணம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல் 4 லட்சம் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து அவதூறாக பேசி கம்பியால் தாக்கியதாக காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் மீது புகார் அளித்த நிலையில் அவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
சிவகங்கையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 26, 2025
சிவகங்கை: ரயிலில் சிக்கிய மாடு: பாலத்தின் நடுவே நிறுத்தம்

மானாமதுரை வழியாக திருச்சிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.நேற்று மாலை 4:30 மணிக்கு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் கிளம்பியது. அண்ணாதுரை சிலை ரயில்வே கேட் பகுதியில் பசு மாடு ஒன்றின் மீது மோதி ரயிலின் அடியில் சிக்கி ஆறு ரயில்வே மேம்பாலத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே போலீசார், ஊழியர்கள் வந்து இறந்த பசுமாட்டை அகற்றிய பிறகு ரயில் 1மணி நேரம் தாமதத்திற்கு பிறகு கிளம்பி சென்றது.
News October 25, 2025
சிவகங்கை:பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சிவகங்கையில் அக்.27 அன்று மருதுபாண்டியர் நினைவேந்தல், அக்.30 அன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் அக்.27,30 அன்று சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையாங்குடி ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் பொற்கொடி விடுமுறை அளித்துள்ளார். இதே போல் அன்று கீழடி அருங்காட்சியகத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


