News March 17, 2025
அதிமுக தீர்மானத்தை புறக்கணித்த பாமக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவினர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று(மார்ச் 17) சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் சேலம் மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் மற்றும் சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள் ஆகிய இரண்டு பாமக எம்.எல்.ஏக்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்..
Similar News
News November 15, 2025
போதையில் அரசு பஸ்சை வழி மறைத்த இரண்டு பேர் கைது!

கெங்கவல்லி 4 ரோடு பகுதியில் உள்ள பூக்கடை முன்பு இன்று திருச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த அரசு பஸ்சை ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி (23) லாரி ஓட்டுனர் இவருடைய நண்பர் பெரியசாமி மகன் பாலாஜி (25) இருவரும் மது போதையில் அரசு பஸ்சை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக கெங்கவல்லி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News November 15, 2025
மேட்டூர் அருகே இளம்பெண் விபரீத முடிவு

சேலம், மேட்டூர் பெரியண்ண கவுண்டர் நகரைச் சேர்ந்த சுருதி (24) என்பவர், விவசாய நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக கணவர் சதீஷ்குமாருடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 15, 2025
பெருமாள் கோவில் கரட்டில் அழுகிய ஆண் சடலம்!

சேலம் கோல்நாயக்கன்பட்டி பெருமாள் கரடு பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. உடனடியாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதில், ரெட்டியூர் காலணியை சேர்ந்த கூலித் தொழிலாளி குப்பன் (57) என்பதும் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.


