News September 7, 2025
அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு

திருப்பூர் மேற்கு மாவட்டம், பல்லடம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பதவி வகித்தவர் ஏ.சித்துராஜ். இவரை அந்த பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், சித்துராஜ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 7, 2025
திருப்பூர்: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

1) சேலம் மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 7, 2025
திருப்பூர்: 10 PASS போதும்..! ரூ.50,000 வரை சம்பளம்

ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)
News November 7, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு பெண் பலி

திருப்பூர், ஊத்துக்குளி அருகே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மைலால் (55). அவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மைலால் வேலைக்கு செல்வதற்காக புதூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


