News March 28, 2025
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

காஞ்சி மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில் வியாழன் (27 மார்) தண்ணீர் பந்தலை காஞ்சி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் திறந்து வைத்தார். அருகில் வாலாஜா பா. கணேசன், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக கட்சி முன்னோடிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். திரளாகப் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Similar News
News April 9, 2025
பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

பரந்தூர் விமானநிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News April 9, 2025
சாதனைகள் படைத்த அரசு பள்ளி மாணவி, மாணவனுக்கு பாராட்டு

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பி.கே.எம்.போனிக்ஸ் ஷிட்டு ரியோ கராத்தே அசோசியேசன் தலைவர் முரளியிடம், கடந்த 4 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று பல்வேறு தேசிய அளவிலான கராத்தேப்போட்டி மற்றும் மாநில அளவிலான டேக்வாண்டா மற்றும் சிலம்ப போட்டிகளில் தங்கம் வென்ற ஆற்காடு நாராயண சுவாமிப் பள்ளி மாணவி சரஸ்வதி & முசரவாக்கம் அரசுப்பள்ளி மாணவன் அறிவுநிதியை மாவட்ட எஸ்.பி. சண்முகம் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
News April 9, 2025
ஊராட்சி மன்ற தலைவி, அவரது கணவர் மீது புகார்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் அதிமுகவை சேர்ந்த மேவலூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமி மற்றும் அவரது கணவர் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.