News March 15, 2026

அதிமுக கூட்டணியில் விஜய்.. வெளியான புது பரபரப்பு

image

NDA கூட்டணியில் விஜய்யை <<19387664>>இணைப்பதற்கான <<>>பேச்சுவார்த்தை தீவிரபடுத்தப்பட்டுள்ளதாம். 80 தொகுதி, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற பாஜகவின் ஆஃபருக்கு தவெக 2-ம் கட்ட தலைவர்கள் சம்மதம் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், தவெகவின் KAS, ஆதவ் போன்றவர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஓரிரு நாளில் கூட்டணி குறித்த முடிவு எட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 9, 2026

நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு.. மக்களுக்கு ஏமாற்றம்

image

திமுக, அதிமுக, பாமக, அமமுக, <<19607806>>காங்கிரஸ்<<>> என பல முன்னணிக் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை எந்த கட்சியும் வாக்குறுதியாக அளிக்கவில்லை. இதனால், தேர்தலையொட்டி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2021-ல் 5 சவரன் வரையிலான நகைக் கடன்களை திமுக அரசு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2026

மாம்பழம் முடக்கமா? ராமதாஸுக்கு பின்னடைவு

image

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய மேல்முறையீடு வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பு கோரிக்கையை 3-வது முறையாக HC நிராகரித்துள்ளது. மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டு விட்டதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோரிக்கை ஏற்கப்படாததால் ராமதாஸ் தரப்புக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

News April 9, 2026

ஆர்வமுடன் வாக்களிக்கும் GEN Z தலைமுறை

image

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில் முதல் முறை வாக்காளர்கள்(GEN Z ) ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்களித்த பிறகு வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த GEN Z செஃல்பி பாயிண்டில் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதேபோல கேரளாவில் முதல் முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டது.

error: Content is protected !!