News January 22, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்? முடிவை அறிவித்தார்

‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரம், கரூர் வழக்கில் CBI விசாரணை ஆகியவற்றை கொண்டு விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுபோன்ற கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல தங்களுக்கு நேரமில்லை என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். மக்கள் தங்களுடன் உள்ளதாகவும், 2026-ல் நிச்சயம் விஜய் முதல்வர் ஆவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News April 6, 2026
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*இரும்பை யாராலும் அழிக்க முடியாது, அதன் துருவைத் தவிர. அதேபோல் ஒரு மனிதனை யாராலும் அழிக்க முடியாது, அவனது சொந்த சிந்தனையைத் தவிர. *எனக்கு மிகப்பெரிய சந்தோஷமே, ஒருவர் ஒரு காரியத்தை செய்ய முடியாது என்று சொன்னால், அதை செய்து காட்டுவது தான். *இறுதியில், நாம் எடுக்காத வாய்ப்புகளைப் பற்றி மட்டுமே வருத்தப்படுவோம். *மக்கள் உங்கள் மீது வீசும் கற்களைக் கொண்டு ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்குங்கள்.
News April 6, 2026
யாரை திருமணம் செய்யலாம் என்று கூட AI சொல்லும்: பிரதீப்

உறவு, உடை, மேக்கப் முதல் மருத்துவம் வரை அனைத்திற்கும் பலர் ChatGPT-யையே சார்ந்திருப்பதாக பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் LIK பட நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் சக மனிதர்களை விட தங்கள் செல்போனை அதிகம் நம்பும் ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவித்தார். எதிர்காலத்தில், ஒருவர் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை கூட AI சொல்லும். இதுவே LIK படம் உருவாக காரணம் என்றும் தெரிவித்தார்.