News March 23, 2026
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?

TN-ல் NDA கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ADMK 170+ தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. BJP-27, PMK-18, AMMK-11 தொகுதிகளில் களமிறங்குகின்றன. இதர கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் EPS கூறியுள்ளார். 2021 உடன் ஒப்பிடுகையில் பாஜக கூடுதலாக 7 தொகுதிகளை பெற்றுள்ளது. 2021-ல் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக இம்முறை 5 இடங்கள் குறைவாக 18 தொகுதிகளில் களம்காண்கிறது.
Similar News
News April 8, 2026
திருச்சி: யுபிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும், யுபிஎஸ்சி தேர்வுகள் வரும் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மாவட்டத்தில் மொத்தம் 1310 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News April 8, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு 10 முதல் இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 8, 2026
NDA கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால்? ஸ்டாலின்

தமிழகத்தை சீரழிக்க பல திட்டங்களை NDA கூட்டணி தீட்டியிருப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள் என்றும் தமிழை அழிக்க மும்மொழி கல்விக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தலை செயல்படுத்திவிடுவார்கள் எனவும் அவர் கூறினார். இவற்றையெல்லாம் தடுக்க திமுகவால் மட்டுமே முடியும் என்றும் தெரிவித்தார்.


