News March 19, 2026

அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

image

அதிமுக கூட்டணி ஏறக்குறைய இறுதியாகிவிட்ட நிலையில், கடைசிநேரத்தில் புதிதாக ஒரு கட்சி இணைந்துள்ளது. மாவீரன் கட்டபொம்மன் பேரவையின் தலைவர் PV ராதாகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் EPS-ஐ சந்தித்தனர். இதையடுத்து, வரும் தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவை அளிப்பதாக PV ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கூட்டணியில் இணைந்த அவருக்கு, EPS நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Similar News

News April 8, 2026

நடிகை சுபாஷினி மரணம்.. கணவர் கண்ணீர்

image

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் சீரியல் நடிகை <<19578782>>சுபாஷினி தற்கொலை<<>> செய்து கொண்டது சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், சுபாஷினி குறித்து அவரது கணவர் பிபின் சந்திரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ‘பேபி உன்னை போல் என்னை யாரும் காதலித்தது இல்லை. என் நினைவில், எனக்குள் நீ எப்போதும் வாழ்கிறாய். நீ உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

News April 8, 2026

BREAKING: பரப்புரையில் விபத்து.. விஜய் அதிர்ச்சி

image

விஜய்யின் இன்றைய நெல்லை பரப்புரையில் இன்று மட்டும் 5 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை விஜய்யின் பரப்புரை வாகனத்தை, தொண்டர்கள் பைக்கில் பின்தொடர்ந்தபோது மட்டும் 4 விபத்துகள் அரங்கேறியுள்ளன. இதில் அரசுப்பேருந்து மோதி படுகாயமடைந்த இளைஞர் உள்பட 16 பேர் சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர் விபத்துகள் நடப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News April 8, 2026

முதல்வர் வேட்பாளர்கள் மனைவியிடம் உள்ள தங்கம்!

image

CM வேட்பாளர்களாக களத்தில் உள்ளவர்கள் மற்றும் அவர்களது மனைவியிடம் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதைப் பார்க்கலாம். ஸ்டாலினிடம் தங்கம் இல்லை; அவரது மனைவி துர்காவிடம் 720 கிராம்(g) உள்ளது. EPS-யிடம் 100g, அவரது மனைவி ராதாவிடம் 720g தங்கம் உள்ளது. சீமானிடம் 150g, அவரது மனைவி கயல்விழியிடம் 1,600g, விஜய்யிடம் 883g, அவரது மனைவி சங்கீதாவிடம் 3,132g தங்கம் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!