News January 12, 2026
அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. எதிர்பாராத அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இணைய மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக EPS கூறியுள்ளார். அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது பேசிய அவர், இன்னும் ஓரிரு நாள்களில் புதிய கட்சி அதிமுக கூட்டணிக்கு வரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, அதிமுக கூட்டணியில் அமமுக, தேமுதிக இணையலாம் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 1, 2026
இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாக்., அறிவிப்பு

T20 WC தொடரில் INDக்கு எதிரான லீக் போட்டியை புறக்கணிப்பதாக PAK அறிவித்துள்ளது. PAK கிரிக்கெட் அணிக்கு T20 WC-ல் விளையாட ஒப்புதல் வழங்கி உள்ள PAK அரசு, பிப்ரவரி 15 நடைபெறும் INDக்கு எதிரான போட்டியில் PAK களமிறங்காது என்று தெரிவித்துள்ளது. BAN அணி இந்தியாவில் விளையாட மறுத்ததைத் தொடர்ந்து, அந்த அணியை ICC நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த புறக்கணிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News February 1, 2026
பட்ஜெட்டில் இது மிகவும் ஏமாற்றம்: அன்புமணி

NDA-வில் இருந்து கொண்டே, மாநில வரிப் பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசை அன்புமணி விமர்சித்துள்ளார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வரவேற்றுள்ள அவர், 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் நேரடி வரி வருவாயில் 41% மட்டும் தான் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50% ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News February 1, 2026
பாட்ஷாவுடன் கைகோர்க்கும் பாலிவுட் பாட்ஷா..!

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பாலிவுட் கிங் ஷாருக்கான் ரஜினியின் நண்பராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த நிலையில், 2-ம் பாகத்தில் மேலும் பல பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


