News March 24, 2026

அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்

image

2026 தேர்தலில் தவாகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். வேல்முருகனை சந்தித்த அவர், கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த அவர், திடீரென தவாக பக்கம் தாவியுள்ளார். முன்னதாக, தனது 10 கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியில் இடம்பெறுவேன் என வேல்முருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 31, 2026

தொகுதியை மாற்ற நெருக்கடி கொடுக்கிறதா காங்கிரஸ்?

image

சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தொகுதியை தனது ஆதரவாளருக்கு வழங்க வேண்டும் என காங்., MP கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து திமுகவிடம் கேட்கிறாராம். கூட்டணி பேச்சு முடிந்து தொகுதிகளை ஒதுக்கிய பின்பும் காங்., குடைச்சல் கொடுப்பதால் திமுக தலைமை உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News March 31, 2026

உண்மை, அகிம்சை மற்றும் கருணையின் பாதை: PM மோடி

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு PM மோடி தனது வாழ்த்தை X-ல் பதிவிட்டுள்ளார். மகாவீரரின் வாழ்க்கையும் போதனைகளும் உண்மை, அகிம்சை மற்றும் கருணையின் பாதையை ஒளிரச் செய்வதாக கூறியுள்ள அவர், அவருடைய கொள்கைகள் ஆன்மிக ரீதியாக எழுச்சியூட்டுபவையாகவும், இன்றைய உலகிற்கு மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது வழி சமூகத்தின் மீதான நமது பொறுப்பை நினைவூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 31, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 குறைந்தது

image

தங்கம் விலை இன்று(31.03.2026) மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹100 குறைந்து ₹13,670-க்கும், சவரனுக்கு ₹800 குறைந்து ₹1,09,360-க்கும் விற்பனையாகிறது. நேற்று காலையில் விலை குறைந்து, மாலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு ₹1,360 அதிகரித்திருந்தது. அதேபோல், <<19520449>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை உயர்ந்துள்ள நம்மூர் சந்தையில் தங்கம் விலை இன்று குறைந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!