News March 16, 2026

அதிமுக கூட்டணியில் இணைந்த இஜபுக!

image

அதிமுக கூட்டணியில் இணைவதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்த பிறகு பேசிய அவர், வருங்கால முதல்வரை(EPS) சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி என்றார். தேர்தல் பிரசாரத்தில் ஏவுகணைகளும், எறிகுண்டுகளும் பாயும் எனக் கூறினார். மேலும், வரும் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் எனவும் தொகுதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Similar News

News April 8, 2026

FLASH: கடலூரில் கால் பதிக்கும் விஜய்!

image

கடலூரில் நாளை தேர்தல் பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஞ்சை நகர் மைதானத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், வடலூர், சேத்தியாத்தோப்பு, தொழுதூரில் விஜய் வேனில் இருந்தவாரே பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், தவெகவினர் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளனர். இன்று நெல்லையில், விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளது கவனிக்கத்தக்கது.

News April 8, 2026

கட்டிப்பிடிப்பதும் அன்பு தான்: கியாரா அத்வானி

image

சாரா அர்ஜுனின் தோளில் ராகேஷ் பேடி(71) முத்தமிட்டது வைரலாகி நெட்டிசன்களின் விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு தந்தை-மகள் பாசத்தின் வெளிப்பாடு என ராகேஷ் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய நிகழ்வில் கட்டிப்பிடிக்க தயங்கிய ராகேஷை கியாரா அத்வானி கட்டிப்பிடித்து அன்பு பாராட்டினார். இதனையடுத்து, ஒரு வரைமுறை இல்லாமல் கிசுகிசுக்கக்கூடாது; கட்டிப்பிடிப்பது என்பது அன்பின் வெளிப்பாடுதான் என்றார்.

News April 8, 2026

வரலாறு காணாத விலை குறைந்தது.. மகிழ்ச்சி செய்தி

image

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிவாயு பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே 2 வாரங்கள் <<19594820>>போர் <<>>நிறுத்தப்படும் என்ற அறிவிப்பால், கச்சா எண்ணெய் விலை 17% சரிந்து பீப்பாய் ஒன்று $95 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!