News January 12, 2026
அதிமுக கூட்டணியில் அமமுக இணைகிறதா?

அதிமுக கூட்டணியில் இன்னும் ஓரிரு நாள்களில் புதிய கட்சிகள் இணையும் என EPS தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க பாஜக தலைமையிடம் EPS சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோளிங்கர், பாபநாசம், ஆண்டிப்பட்டி, சாத்தூர், தாம்பரம் உள்ளிட்ட 7 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News January 22, 2026
நடிகர் கமல் ராய் காலமானார்.. குவியும் அஞ்சலி

நடிகை ஊர்வசியின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. உயிர்துணையாக இருந்த அவரது சகோதரர் கமல் ராய் (54) மாரடைப்பால் காலமானார். ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ என்ற தமிழ் படம் மூலம் நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர் மலையாளத்தில் ‘தி கிங் மேக்கர்’, ‘லீடர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றார். இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள இயக்குநர் வினயன், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
வைத்திலிங்கம் திமுகவிற்கு வந்தது ஏன்? திருச்சி சிவா

வைத்திலிங்கம் திமுகவிற்கு வந்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என திருச்சி சிவா கூறியுள்ளார். மேலும், CM ஸ்டாலின் மீதும், அவரது ஆட்சித்திறன், செயல்பாடு மீதும் நம்பிக்கை வைத்து திமுகவை நாடி வைத்திலிங்கம் வந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசுகையில், எங்கள் உறவு மிக சிறப்பாக இருக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் எனவும் அவர் பேசியுள்ளார்.
News January 22, 2026
ஒரு மேட்ச்.. வரிசைக்கட்டிய ரெக்கார்டுகள்!

முதல் T20I-ல் 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அணியாக மட்டுமின்றி கேப்டன் சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் பல ரெக்கார்டுகளை படைத்துள்ளனர். அவை என்னென்ன என்று அறிய மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றும் என நினைக்கிறீங்களா?


