News June 23, 2024
அதிமுக ஆர்ப்பாட்டம் – போலீஸ் குவிப்பு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரிலும் அதிமுக நாளை போராட்டம் நடத்த உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகிக்கும் வகையில் திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
Similar News
News September 27, 2025
தாம்பரம் கமிஷனர் அதிரடி உத்தரவு

தாம்பரம் சந்தோஷபுரம் சோதனை சாவடி அருகே செப்.20ம் தேதி எஸ்.ஐ.,வெங்கடேசன், காவலர்கள் ஜலேந்திரன், கதிரேசன் ஆகியோர் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். செப்.23ம் தேதி மேடவாக்கத்தில் போலீசார் திருமுருகன், வெங்கடேசன் ஆகியோர் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். இவர்கள் 5 பேரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதிக் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். (லஞ்சம் கேட்டா 044-2231 0989 CALL பண்ணுங்க)
News September 27, 2025
செங்கல்பட்டு: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/ APPLY NOW

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 27, 2025
பம்மல்: மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

பல்லாவரம் அடுத்த பம்மலில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையில் உள்ள சமையல் அறையில் இன்று (செப்.27) காலை மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பணிபுரிந்த மின் பணியாளர் மணிகண்டன் மற்றும் கடை ஊழியர் பார்த்திபன் ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.