News July 30, 2024

அதிமுக ஆட்சியில் துவங்கிய திட்டத்தை கிடப்பில் போட்ட திமுக

image

மேட்டூர் அணைக்கு வரும் உபரிநீரை சரபங்கா திட்டப்படி நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தவில்லை. சரபங்கா வடிநில ஏரிககளை நிரப்பும் திட்டத்தை 3 ஆண்டாகியும் திமுக அரசு செய்யவில்லை. அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை அரசு தடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்ட சரபங்கா திட்டத்தை திமுக அரசு முடிக்கவில்லை என திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

Similar News

News August 21, 2025

யூரியாவைப் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை!

image

சேலம் மாவட்டத்தில் யூரியாவைக் கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் தனியார் உர விற்பனை நிலையத்தார் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நிலையத்தின் உரிமம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படும். கடத்தல், பதுக்கல் கண்டறியப்படும் உர விற்பனை நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News August 21, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 21, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!