News December 30, 2025
அதிமுக அடிமை கட்சி தான்: அண்ணாமலை

‘அதிமுக அடிமை கட்சி’ என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, ‘என்னை பொறுத்தவரை அதிமுகவும் அடிமை தான், NDA கூட்டணியும் அடிமை தான். யாருக்கு அடிமை? மக்களுக்கு அடிமை’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களை எஜமானர்களாக நினைத்து, அவர்களுக்காக சேவை செய்யும் கூட்டணியை அடிமை என சொன்னால், அதை பெருமையாக நினைத்து வேலை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
தீபத்தூணில் விளக்கேற்றிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிகோரிய வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு சின்மயா பாரம்பரிய மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் போன்று தூண் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதில் தீபம் ஏற்றினார்.
News January 25, 2026
விலை மளமளவென குறைந்தது.. HAPPY NEWS

நாளை ஞாயிற்றுக்கிழமை சிக்கன் சாப்பிடலாம் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வந்துள்ளது. நாமக்கல்லில் கறிக்கோழி விலை (உயிருடன்) 1 கிலோ ₹133 ஆக குறைந்துள்ளது. மேலும், இந்த வாரத்தில் மட்டும் கிலோவுக்கு சுமார் ₹20 வரை சரிந்துள்ளது. இதனால், கடந்த வாரம் இறைச்சிக் கடைகளில் சிக்கன் கிலோ ₹300 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ₹40 வரை குறைய வாய்ப்புள்ளது. நாளை யாரெல்லாம் சிக்கன் வாங்க போறீங்க?
News January 24, 2026
இரவில் பல் துலக்குவது அவசியமா?

தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். காலை எழுந்தவுடன் ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை. ஆனால், நம்மில் பலர் காலையில் பல் துலக்குவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம், இரவில் அலட்சியமாக இருந்துவிடுகிறோம். ஆனால், இரவில் பல் துலக்குவதும் மிகவும் அவசியம். அப்போதுதான், உணவுத் துணுக்குகள் பற்களில் ஒட்டிக்கொண்டு கிருமிகள் வளர உதவுவதை தடுக்க முடியும்.


