News June 5, 2024

அதிமுகவை முந்திய நாம் தமிழர் கட்சி

image

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது இதில் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் பாஜக வேட்பாளரை அடுத்து அதிமுக வேட்பாளர் வருவார் என்று கூறப்பட்டு வந்தது ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 39 ஆயிரத்து 603 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார் அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தன் 25,165 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட பின்தங்கினார்

Similar News

News March 3, 2026

புதுவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 3, 2026

புதுவை அரசுக்கு – நாஜிம் வேண்டுகோள்

image

காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H. நாஜிம், புதுவை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்வு செய்யப்பட்ட 192 ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு, (PST) தேர்தல் நடத்தை விதி (MCC) நெருங்கி வருவதால், தேர்தல் கமிஷன் நடத்தை விதியை அறிவிப்பதற்கு முன்பாக, உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்று இவ்வாறு கோரியுள்ளார்.

News March 3, 2026

புதுச்சேரி: காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டம்

image

வருகின்ற 2026 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஊடக மற்றும் விளம்பரக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளருமான டாக்டர் அஞ்சலி நிம்பால்கர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

error: Content is protected !!