News February 27, 2026
அதிமுகவை கிளை கழகமாக மாற்றிய பாஜக: CM ஸ்டாலின்

வளர்ச்சி என்றாலே பிடிக்காத கட்சியாக பாஜக இருந்து வருவதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பதால் அதிமுகவை தனது கிளைக் கழகமாக மாற்றி TN-ல் நுழைய பாஜக முயற்சிப்பதாகவும், அதிமுக அரசு ஊழல் நிறைந்தது என பேசியது இப்போது அமித்ஷாவுக்கு நினைவில் இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்காக கூட TN-க்கு எந்த சிறப்பு திட்டங்களையும் பாஜக அறிவிக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.
Similar News
News February 28, 2026
காங்கிரஸுக்கு ரோஷம் இல்லை: குஷ்பு

தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸுக்கு தகுதியும் இல்லை, தைரியமும் இல்லை என குஷ்பு விமர்சித்துள்ளார். ஒரே சமயத்தில் திமுக மற்றும் விஜய்யிடம் காங்கிரஸ் பேரம் பேசிக்கொண்டு இருப்பதாகவும், யாரிடம் இருந்து அதிக லாபம் கிடைக்கிறதோ அந்த பக்கம் சென்றுவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு தரமுடியாது என CM ஸ்டாலின் சொன்ன பிறகும், காங்கிரஸுக்கு ரோஷம் வாரவில்லை எனவும் சாடியுள்ளார்.
News February 28, 2026
குழந்தைகளின் ரத்தத்தை குடிக்கும் அரக்கன் (போர்)

போரை தீர்மானிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க, அதன் கோர முகத்தை நேரடியாக சந்திப்பது என்னவோ அப்பாவி மக்கள்தான். 2025-ல் மட்டும் உலகளவில் நடந்த போர்களில் சுமார் 2,40,000 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சோகம் இத்துடன் நின்றுவிடவில்லை. 2024-ல் மட்டும் சுமார் 47.3 கோடி குழந்தைகள் போரினால் வறுமை, உடல் & மனரீதியிலான பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். இப்போ சொல்லுங்க.. போர் அவசியமா?
News February 28, 2026
செவ்வாய்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

சந்திரசூடேஸ்வரா் கோயில் விழாவை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 சனிக்கிழமை அன்று வேலைநாள் என கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, <<19256882>>குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை<<>> மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


