News February 26, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. புதிய அறிவிப்பு வெளியானது

தேர்தலையொட்டி, சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் நாடார் பாதுகாப்பு பேரவை இணைந்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள், சென்னையில் இன்று EPS-ஐ சந்தித்தனர். தொடர்ந்து, வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற பாடுபடுவோம் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
Similar News
News February 27, 2026
கோவை திமுக மாநாட்டில் பங்கேற்கும் ஸ்டாலின்

கோவையில் நடைபெறும் திமுக மாநாட்டில் ஸ்டாலின் நேரடியாக கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். மதுரையில் தென் மண்டல பாக முகவர்கள் மாநாடு அண்மையில் முடிந்த நிலையில், இன்று மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
News February 27, 2026
வங்கி கணக்கில் பணம்.. அரசு இன்ப அதிர்ச்சி

₹1,000 அல்லது அதற்கும் குறைவான இருப்பு உள்ள செயலற்ற PF கணக்குகளில் உள்ள பணம் தானாகவே உரிய நபரின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு நேரடியாக மாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பொதுவாக ஒரு PF கணக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எந்த புதிய பங்களிப்பும் இல்லாமல் இருந்தால், அது செயலற்றதாக கருதப்படும். அதன்படி 6,00,000-க்கும் மேற்பட்ட செயலற்ற கணக்குகளை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
News February 27, 2026
முட்டை ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு

பறவைக் காய்ச்சல் பரவல் குறித்த அச்சத்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் முட்டைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. இந்தியா, ஜெர்மனி உள்பட 40 நாடுகளிலிருந்து கோழி மற்றும் முட்டை இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓமன் மற்றும் UAE இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களாக உள்ள நிலையில் சவுதியின் இந்த தடை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.


